Cast
Dhanush as Karuppu
Tapasee as Irin
Jayabalan as Pettaikaran
Kishore
Crew
Director: Vetrimaran
Producer: S. Kathiresan
Music Director: G V Prakash Kumar
Ayyayo Song Lyrics in Tamil
Singer: SP Balasubramaniyam, SP Charan, Prashanthini
Lyrics: Snehan
அய்யய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
என் மேல நிலா பொழியுதடி
உன்ன பாத்த அந்த நிமிஷம்
உறஞ்சு போச்சே நகரவே இல்ல
தின்ன சோறும் செரிக்கவே இல்ல
பொலம்புறேன் நானே
உன் வாசம் அடிக்குற காத்து
என் கூட நடக்கிறதே
என் சேவல் கூவுற சத்தம்
உன் பேரா கேட்கிறதே
அய்யய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
என் மேல நிலா பொழியுதடி
உன்ன தொடும் அனல் காத்து
கடக்கையில பூங்காத்து
குழம்பி தவிக்குதடி என் மனசு
ஓ.. திருவிழா கடைகள போல
தெனருறேன் நான் தானே
எதிரில் நீ வரும் போது
நரளுரேன் ஏன் தானோ
கண் சிமிட்டும் தீயே
என்ன எரிச்சு புட்ட நீயே
அய்யய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
என் மேல நிலா பொழியுதடி
மழைச் சாரல் விடும் வேளை
மண் வாசம் மணம் வீச
உன் மூச்சு தொடுதே நான் மிதந்தேன்
ஓ.. கோடையில அடிக்கிற மழையா
நீ என்ன நனச்சாயே
ஈரத்துல அணைக்கிற சுகத்த
பார்வையில கொடுத்தாயே
பாதகத்தில் என்ன
ஒரு பார்வையால கொன்ன
ஊரோடு வாழுற போதும்
யாரோடும் சேரல நான் அய்யய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
என் மேல நிலா பொழியுதடிஉன்ன பாத்த அந்த நிமிஷம்
உறஞ்சு போச்சே நகரவே இல்ல
தின்ன சோறும் செரிக்கவே இல்ல
பொலம்புறேன் நானே
உன் வாசம் அடிக்குற காத்து
என் கூட நடக்கிறதே
என் சேவல் கூவுற சத்தம்
உன் பேரா கேட்கிறதே
No comments:
Post a Comment